Monday, February 3, 2025

5 ஆண்டுகளில் 64 பேர் பாலியல் வன்கொடுமை : மாணவி சொன்ன அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல் சோர்வாக காணப்பட்ட அந்த மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். அதில் 27 பேரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news