கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் அல்லது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிகளில் நடைபெறும் தேர்வை தடுக்கவே அந்த மாணவன் இதுபோன்று மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.