தெலங்கானா மாநிலத்தில் மர்மநபர்கள் சிலர் பாலத்தில் இருந்து 31 நாய்களை கீழே வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஜனவரி 4ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தில் இருந்து வீசப்பட்டதா, நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.