கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் 3ம் வகுப்பு மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் தேஜஸ்வினி (வயது 8) என்ற மாணவி 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேஜஸ்வினி, மற்றொரு சக மாணவியை சந்திக்க சென்றபோது, காலை 11:40 மணியளவில் பள்ளியில் மயங்கி விழுந்தார். இதையடுத்து பள்ளி ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரடைப்பு காரணமாக குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சிறுமிக்கு உடல்நலக் குறைவு இல்லை என்றும், தங்கள் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை என்றும் பெற்றோர் கண்ணீர் மல்க புலம்பினர்.அடுத்தடுத்து மாரடைப்பால் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.