2019ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு HMPV வைரஸ் உருவாகியுள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூரு, நாக்பூர், மற்றும் தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5 குழந்தைக்கு தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது.