Wednesday, February 5, 2025

ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து கேம் விளையாடிய 3 பேர் ரயில் மோதி பலி

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து 3 இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாடி உள்ளனர். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேம் விளையாடிக்கொண்டிருந்த 3 பேரும் காதில் ஹெட் போன் அணிந்திருந்ததால் ரயிலின் சத்தத்தை அவர்களுக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த மூவரும் செயின்ட் கொலம்பஸ் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest news