Wednesday, February 5, 2025

போதை பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை மாதவரத்தில், போதை பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மாதவரம் ரோஜா நகரில், போதை பொருள் வைத்திருந்த வழக்கில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். அவrகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் இரண்டு நபர்களை தற்போது தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ உயர் ரக மெத்தபெட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

Latest news