Wednesday, December 24, 2025

ரயில் முன்பு மாணவியை தள்ளிவிட்ட வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியா என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு படுகொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, சதீஷ் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி சதீஷ்க்கு அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related News

Latest News