மும்பை கண்டிவாலியில் மராத்தி நடிகை ஊர்மிளா கோத்தாரேவின் கார் மோதியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
நடிகை ஊர்மிளா கோத்தாரே பணி முடிந்து போயிசர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் ஒரு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இந்த விபத்தில் நடிகை மற்றும் அவரது டிரைவரும் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து சமதா நகர் போலீசார் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.