Tuesday, July 1, 2025

முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்த நிலையில், முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, பூடான் மன்னர், மத்திய அமைச்சர்கள் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news