நான் பலவீனமான பிரதமர் இல்லை, தன்னால் முடிந்ததை செய்துள்ளேன் என மன்மோகன் சிங் தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம், அவர் பிரதமராக இருந்தபோது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், தான் பலவீனமான பிரதமர் இல்லை, தன்னால் முடிந்ததை செய்துள்ளேன் என மன்மோகன் சிங் தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில் கூறிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நம்பவில்லை, ஊடகங்களில் சொல்லப்படுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வதை காட்டிலும் வரலாறு தன்னிடம் கனிவாக இருக்கும் என நேர்மையாக நம்புகிறேன் என்று மன்மோகன் சிங் விளக்கம் அளித்திருந்தார். தான் என்ன செய்தேன், என்ன செய்யவில்லை என்பதை சரித்திரம் தீர்மானிக்க வேண்டும் என கூறியிருந்தார்.