சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 113 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.