உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் காவலர்கள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில அதிரடி காவல்படையினர் கூட்டாக இணைந்து இந்த என்கவுன்ட்டரை நடத்தியுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் குருதாஸ்பூரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.
துப்பாக்கிசூட்டில் மூவருக்கும் முதலில் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக புரான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் இரண்டு, இரண்டு க்ளாக் பிஸ்டல்கள் மற்றும் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ் கூறியுள்ளார்.