Friday, December 26, 2025

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1020 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1020 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2 வது பிரிவில் 600 மெகாவாட் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2 வது பிரிவில் பாய்லர் டியூப் பழுது காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

Related News

Latest News