சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், அம்பேத்கர் என்றால் Flower இல்ல Fire என கூறியது, அங்கிருந்தவர்களின் வரவேற்பை பெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், புஷ்பா சினிமாபடத்தை சுட்டிக்காட்டி அம்பேத்கர் என்றால் Flower இல்ல Fire என கூறி அங்கிருந்தவர்களை உற்சாகமடைய செய்தார்.
அம்பேத்கரை எல்லோரும் உயர்த்தி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர் என்றும் அவரை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.