இரண்டு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்வபம் நடைபெற்ற போது பணியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.