Saturday, February 7, 2026

நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் காலமானார்..!!

பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.

பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த கோதண்டராமன் துணை வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மூலம் பிரபலமடைந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related News

Latest News