Monday, December 23, 2024

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுடரில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைநத் 2 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news