செம்மர கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை திருப்பதி போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அண்ணமய்யா மாவட்டத்தில் தொடர்ந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் தங்களிடம் இருந்து செம்மரக்கட்டைகளை வாங்கி செல்வதாக கூறினர்.
தகவலின் அடிப்படையில், ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் செம்மர கடத்தலில் ஈடுபட்ட மந்தக்கிஷோர் சோனி, ஜோஷ்ஹான்ஷ், தாக்கூர் ஆகியோரை கைது செய்தனர். இதனை அடுத்து, சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 155 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.