Sunday, December 22, 2024

பூமியை கடந்து செல்லும் விமானம் அளவுள்ள விண்கற்கள்…பூமிக்கு ஆபத்தா??

விமானம் அளவுள்ள விண்கற்கள், இன்று பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மிக பெரிய இரண்டு விண்கற்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றும் தொடர்ந்து விண்கற்களின் பாதையை கண்காணித்து வருகிறோம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

அதாவது 2024 XY5 என்ற 71 அடி அகலமுள்ள விண்கல், பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லும் என்றும் 2024 SP6 என்ற மற்றொரு விண்கலம், 41 லட்சத்து 50 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும் எனவும் கணித்துள்ளது. இவை பூமியிலிருந்து நிலவை விட 16 மடங்கு தொலைவில் இருப்பதால், பூமிக்கு ஆபத்து நேரிடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news