தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
வைகை அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி; தற்போது 55.25 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.