வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் அதிக கனமழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.