புதுச்சேரிக்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்காமல் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் இன்று சந்தித்து மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய், விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சரிடம் பிரதமர் விசாரிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். புயல் நிவாரண பணிகளை புதுச்சேரி அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்தார்.