ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக் லிமிடெட், கர்நாடக ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த ஒரு குறிப்பிட்ட தொகுதியான மெட்ரானிடசோல் 400 மி.கி மற்றும் பாராசிட்டமால் 500 மி.கி மாத்திரைகள் “தரமானதாக இல்லை” என்று சோதனையின் போது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளின்படி நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.