கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் விரட்டியடிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர், கெலமங்கலம் – உத்தனப்பள்ளி சாலை வழியாக, தேன்கனிக்கோட்டை கஸ்பா வனத்திற்கு விரட்டினர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று இரவு தாவரக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறி உச்சனப்பள்ளி கிராமத்தில் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தியது. பின்னர் யானைகள் இன்று அதிகாலை அஞ்செட்டி சாலையை கடந்து லக்கசந்திரம், சிக்கேபுரம் வழியாக ஆலஹள்ளி வனப்பகுதிக்கு சென்றன. வழியில் இருந்த ராகி, சோள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால், விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.