கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கிலோ 400க்கு விற்பனையான முருங்கை விலை தற்போது 200க்கு விற்பனையாகிறது. கிலோ 80க்கு விற்பனையான தக்காளி 50ஆக விலை குறைந்துள்ளது. இதேபோல் பூண்டின் விலையும் 50 ரூபாய் குறைந்து, கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.