Monday, December 23, 2024

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பணிமூட்டம் நிலவி வந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருவாரூர், மாங்குடி, வடபாதிமங்கலம், கமலாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்பொழுது வரை மிதமான மழை பெய்து வருகிறது.

Latest news