Tuesday, January 13, 2026

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை குறிவைத்து அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், மர்மநபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

Latest News