Monday, December 23, 2024

சென்னையில் மழை-வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னையில் மழை – வெள்ள நீர் தேங்காமல் நிரந்தர தீர்வுகாண திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் எ்ன்று சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் திருபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை-வெள்ள நீர் தேங்கியிருப்பதை காங்கிரஸ் சட்டமன்று குழு தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார். அந்த பகுதிகள் தொடர்ந்து தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வுகாணவில்லை என்றால் அடுத்தமுறை சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறினார்.

திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி, சென்னையில் மழை-வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், சென்னையில் மழை – வெள்ள பாதிப்பு பிரச்சனைக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் திருப்புகழ் கமிட்டி பரிந்துரை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Latest news