Thursday, December 26, 2024

அடிக்கடி தலைவலி வருதா? டக்குனு சரி பண்ண சுக்கு மட்டும் போதும்….

கண்பார்வை கோளாறு, மன அழுத்தம், பசி, தூக்கமின்மை மற்றும் பல்வேறு உடல் உபாதைகளின் அறிகுறியாக தலைவலி அமைகிறது.

எனினும், அடிக்கடி வரும் சாதாரண தலைவலியை சரி செய்ய மாத்திரை மருந்துகளை சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இயற்கையாக தலைவலியை சரி செய்ய இயற்கை மருத்துவர்கள் கூறும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் பார்ப்போம். உணவில் இஞ்சி, மஞ்சள் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்வது தலைவலியை தடுக்க உதவும். சுக்கு, பால் சாம்பிராணி மற்றும் மஞ்சளை வெந்நீரில் இழைத்து நெற்றியில் பற்று போடலாம்.

கழுத்து வலி இருந்தால், கழுத்திலும் இதே கலவையை பற்றாக போடுவது சிறப்பான பலன்களை அளிக்கும். இது மட்டுமில்லாமல் மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்திற்கு சாப்பிட்டு சீரான தூக்கத்தை உறுதி செய்வது போன்ற நடைமுறைகளை கடைபிடிப்பது தலைவலி மட்டுமில்லாமல் மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Latest news