‘லவ் டுடே’ திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிறப்பான வசூலையும் குவித்ததை அடுத்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்.
யுவனின் இசை, விறுவிறுப்பான கதைக்களம், புதுமையான அணுகுமுறை என இந்த படம் ஹிட் அடிக்க பல காரணங்கள் இருந்தன.
அண்மையில், இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அசாதாரணமான படம் என பாராட்டி இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவிற்கு பாராட்டுக்கள் என ட்வீட் செய்தார் பிரதீப். இதைப் பார்த்த சில நெட்டிசன்கள் வயதிலும் அனுபவத்திலும் பெரியவரை சார் என கூட அழைக்கவில்லை.
ஒரு படம் ஹிட் ஆகி விட்டால் போதுமே கையில் பிடிக்க முடியாது என கமெண்ட் செய்து வர, இதில் என்ன மரியாதை குறைவு இருக்கிறது, அவர் director வெற்றிமாறன் என்று தானே பதிவிட்டு இருக்கிறார், இதற்கு ஏன் குறை சொல்ல வேண்டும் என ஒரு தரப்பினரும் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.