Sunday, December 28, 2025

‘துப்பட்டா போடாதீங்க தோழி’ துப்பட்டாவை தூக்கி எறிந்த அரசுப்பள்ளி மாணவிகள்!

அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்வதற்கு முன்னதாக, முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களை கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கும் திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.

இதையடுத்து, அரசுப்பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக் கூடியவர்களுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கல்வராயன் அரசுப்பள்ளியில் மாணவிகளுடன் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மாணவிகளிடம் கல்வி மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை குறித்து பேசிய அவர், தனக்குப் பின் வர இருக்கும் ‘துப்பட்டா போடுங்க தோழி’ புத்தகத்தின் ஆசிரியரான கீதா இளங்கோவனை துப்பட்டாவை தூக்கி எறிந்து வரவேற்க முடியுமா எனக் கேட்டுள்ளார்.

சற்று நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிந்த கீதா இளங்கோவனை மாணவிகள் துப்பட்டா வீசி வரவேற்ற காட்சியை, நிவேதிதா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வரும் கீதா இளங்கோவனுக்கு மாணவிகள் அளித்த வித்தியாசமான வரவேற்பு கவனம் ஈர்த்துள்ளது.

Related News

Latest News