உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் மனநிலை சார்ந்த அழுத்தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
சரியாக பராமரிக்கப்படாத தலைமுடி கொட்டத் தொடங்குவதுடன் வளராமல் அப்படியே நின்றுவிடும்.
பொதுவாக, இது பிடிக்காது அது பிடிக்காது என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஒதுக்குபவர்களுக்கு, தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதில் தொய்வு ஏற்படும்.
இதனை தவிர்க்க பால், இறைச்சி, பச்சை காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை சரிவிகிதத்தில் உட்கொள்ள வேண்டும். வறண்டு போகும் தலை சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு, தினமும் தகுந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது அவசியம். Smoothening, Straightening என தலைமுடியை அதிக styling செய்வது அதனை வலுவிழக்க செய்யும் என்பதால், அவ்வப்போது break எடுப்பது நல்லது.
தலைக்கு குளிக்காமல் வெகு நாட்களுக்கு இருப்பது முடி உதிர காரணமாக அமையும் என்பதால் சீரான இடைவெளியில் தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், தலைமுடி நுனியில் வெடிப்பு விழுந்தால் முடியை சற்றே வெட்டுவது பலனளிக்கும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடுவது, நல்ல தூக்கம், முறையான உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடித்தாலே மேம்பட்ட தலைமுடி ஆரோக்கியத்தை கண்கூடாக காண முடியும்.