ஹோட்டல்களில் வெள்ளை நிற பெட்ஷீட் மட்டுமே பயன்படுதுவதன் ரகசியம்!

271
Advertisement

தங்குமிடம் என்ற தேவையையும் தாண்டி நட்சத்திர ஹோட்டல்கள், பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து நிம்மதியான ஒரு அனுபவத்தை வழங்குகிறது.

அழகான தங்கும் சூழலை உருவாக்க ஒவ்வொரு ஹோட்டலும் தனித்துவமான யுக்திகளை கையாண்டு மக்களை தன்வசம் இழுக்கின்றன.

ஆனால், பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் காணப்படும் ஒரு ஒற்றுமை வெள்ளை நிற பெட்ஷீட்கள் தான். அப்படி வெள்ளை நிற பெட்ஷீட்களை பயன்படுத்துவதன் காரணம் என்பதை தெரிந்து கொள்வோம். ஹோட்டல் அறைகளில் உபயோகப்படுத்தும் படுக்கை விரிப்புகளை மொத்தமாக சலவைக்கு அனுப்புவார்கள்.

அப்படி செய்யும் போது வெவ்வேறு வண்ணங்களில் படுக்கை விரிப்புகள் இருந்தால், ஒன்றின் நிறம் இன்னொன்றின் மீது பரவ வாய்ப்புள்ளது. மேலும், விரிப்புகளில் படிந்துள்ள கறைகளை எளிதில் கவனித்து அகற்ற முடியாது. வெள்ளை படுக்கை விரிப்புகளில் இது சாத்தியமாகிறது.

மேலும், அறைகளில் போடும் போது, அறையின் வடிவமைப்புக்கும் வர்ணங்களுக்கும் வெள்ளை நிறம் இயல்பாகவே ஒத்து போகும் என்பதால் ஹோட்டல்களில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் பய்னபடுத்தப்படுகின்றன. இப்போது மிகவும் வழக்கமாக மாறிவிட்ட இந்த ட்ரெண்ட் 90களில் பல Interior Designersகளின் பரிந்துரையின் பேரில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.