மேகக்கடலின் மீது உதித்த சூரியன்! இயற்கையின் அதிசயக் காட்சி

261
Advertisement

இங்கிலாந்து நாட்டில் பீக் மாவட்ட தேசிய பூங்காவில் drone pilot நைஜ் வான்டெல் படமாக்கிய அரிய இயற்கைக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேகங்கள் வானத்தில் இருப்பதற்கு பதிலாக குளிர்கால சூழல்களில் மூடுபனியுடன் இணைந்து மலைகளின் மீதும் தாழ்வான பகுதிகளிலும் கம்பளம் போல படர்வது இயல்பான நிகழ்வு என இங்கிலாந்து வானியல் துறை தெரிவித்துள்ளது.

குளிர்ந்த காற்று கதகதப்பான காற்றுக்குள்ளாக அடைத்துக்கொள்ளும் போது, இது போன்ற Cloud Inversion சாத்தியமாகிறது. கடலின் அலைகள் போல மேகக்கூட்டம் எழும்ப அதன் நடுவே சூரியன் உதிக்கும் மனதை மயக்கும் காட்சியை drone தொழில்நுட்ப உதவியுடன் நைஜ் படமெடுத்துள்ளார்.

இந்த வீடியோவை எடுக்க அதிகாலையில் மலை மீது ஏறி காத்திருந்ததாக கூறும் நைஜ், பீக் மாவட்டதில் இது போன்ற அசாத்தியமான இயற்கைக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.