Thursday, January 15, 2026

சிம்புவுக்கு சீக்கிரமா கல்யாணம்…டி.ஆர் கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தனித்துவமான நடிகர் மற்றும் பாடகர் என திரைத்துறையில் தனக்கான இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சிம்பு.

இதுவரையில் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால், லட்சுமி மேனன் என நடிகைகளுடன் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கி கொள்ளும் சிம்புவுக்கு தற்போது வயது 39.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வழிபாடு செய்ய சென்றிருந்த டி.ஆர்.ராஜேந்திரனிடம் வழக்கம் போல ஒட்டுமொத்த செய்தியாளர்களும் சேர்ந்து, ‘சிம்பவுக்கு எப்போ கல்யாணம்?’ என்ற அந்த ஒற்றை கேள்வியை தொடுக்க, தனக்கே உரிய பாணியில் சுவைபட பதிலளித்துள்ளார் டி.ஆர்.

‘என் மகனுக்குப் பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட, சிம்புவுக்குப் பிடித்த மணமகளை, அந்தக் குலமகளை, திருமகளை இறைவன்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என rhyming குறையாமல் டி.ஆர் கொடுத்த பதில் கவனம் ஈர்த்துள்ளது.

இதற்கிடையே, விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘வாரிசு’ படத்திற்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி’ பாடல் வெளியானது முதலே தீயாக ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News