Monday, July 21, 2025

உடல் எடையை குறைக்க Follow பண்ண வேண்டிய பத்து சிம்பிள் டிப்ஸ்!

கொலஸ்ட்ரோல், உயர் இரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு தொடங்கி இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற தீவிர நோய்களுக்கு முக்கிய காரணமாக கட்டுப்படுத்தப்படாத உடல் பருமன் அமைகிறது.

உடல் எடையை முறையாக பராமரிக்க எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடித்தாலே போதுமானது.

நார்ச்சத்து மிகுந்த பழங்களையும் காய்கறிகளையும் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.

சக்கரை அதிகம் உள்ள இனிப்பு வகைகளை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். சர்க்கரைக்கு மாற்று என்ற பெயரில் எடுத்துக் கொள்ளும் செயற்கை இனிப்பூட்டிகளும் உடல் எடை குறைப்புக்கு ஆக்கப்பூர்வமாக உதவாது என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும்.

வறுத்த, பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.

நாள் முழுவதும் சீரான இடைவெளிகளில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு பச்சை காய்கறி அல்லது கீரையை தினமும் சாப்பிட முயற்சிக்க வேண்டும்.

தினமும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். உட்கார்ந்து வேலை செய்யும் சூழலை கொண்டவர்கள் அவ்வப்போது எழுந்து நடந்து விட்டு வந்து பணியை தொடர வேண்டும்.

மன அழுத்தம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்து உடல் எடையையும் அதிகரிக்கும் என்பதால், நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரியங்களை பற்றி கவலை கொள்ளாமல், மனதை லேசாக வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இரவில் நிம்மதியாக தூங்கி பகலில் புத்துணர்வாக எழுந்து கொண்டாலே உடல் எடை முறையாக பராமரிக்கப்படுவது மட்டும் இல்லாமல், பொதுவான உடல் ஆரோக்கியமும் மேம்படுவதை உணர முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news