Friday, July 4, 2025

மேடை மீது மிதந்து வந்த ரஷ்ய பெண்கள்! வைரலாகும் வீடியோ

உலக முழுவதும் பல்வேறு நடன முறைகள் இருந்தாலும், ஒவ்வொரு நடனத்திற்கும் அதற்கே உரித்தான தனித்தன்மை உள்ளது.

ரஷ்யாவில் பெரெஸ்கா என்ற பாரம்பரிய நடன முறையை பின்பற்றி, Berezka Dance Ensemble என்ற கலைக்குழுவினர் ஆடி அண்மையில் வெளியான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1948ஆம் ஆண்டு நடேஸ்தா நடேஸ்தினா என்ற நடனக்கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக்  குழு, சிறிய நடன அசைவுகளை மட்டும் சீராக வெளிப்படுத்துவதால், மேடையில் மிதந்து வருவது  போல காட்சியளிப்பதால் காண்போரை கவர்ந்து வருகிறது.

இன்றும் பிரபலமாக இருக்கும் இந்த நடன முறையில், மேடை மீது மிதந்து வருவது போல தோன்றுவதற்காக நடனக்கலைஞர்கள் மிகவும் சிரமம் எடுத்து செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news