Sunday, August 31, 2025

பேர் வைக்கறதுக்கு முன்னாடியே வேற லெவல் வசூலை அள்ளிய ‘தளபதி 67’

தனது நடிப்பில் வெளியாகும் படங்களை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் எப்போதும் கூர்ந்து நோக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்திருப்பவர் விஜய்.

இப்போதும் வாரிசு ரிலீஸ் டேட், ரஞ்சிதமே பாடலின் ட்ரெண்டிங் வெற்றி என 66வது படத்தை பற்றிய அப்டேட்கள் ஓய்வதற்குள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67ஐ பற்றிய சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது.

பெயர், நடிகர்கள் என படத்தின் அங்கமாக இருக்கப்போகும் பெரும்பான்மை தகவல்கள் எதுவுமே உறுதியாகாத நிலையில், தளபதி 67இன் OTT உரிமையை பிரபல OTT தளம் கிட்டத்தட்ட 160 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகை படத்தின் பட்ஜெட்டில் பாதி என்றும், கோலிவுட்டில் முன்னெப்போதும் இல்லாத pre-business நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், இப்படம் விஜய், த்ரிஷா, சஞ்சய் டட், நிவின் பாலி, விஷால், மன்சூர் அலி கான், கவுதம் மேனன் மற்றும் மிஷ்கின் நடிப்பில் Pan-India படமாக தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News