உங்கள் மெத்தையில் இந்த விஷயங்கள் தென்பட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!

304
Advertisement

நாள்தோறும் உழைத்து அழுத்தவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் இரவு தூக்கம் ,அப்படி பட்ட துக்கத்தில் அசவுகரியம் ஏற்பட்டால் என்னவாகும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பை மீட்டெடுக்கவும் உதவுவது நிம்மதியான தூக்கமாகும்.

இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க படுக்கை அறை, கற்றோட்டம், தாராளமான கட்டில் என அனைத்துமே இருந்தாலும், மெத்தை சரியாக இல்லை என்றால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாது.

நம் உடம்பில் ஏற்படும் வலிகளுக்கும் மெத்தைகளுக்கு சம்மந்தம் இருக்கிறது, பொருத்தமில்லாத மெத்தைகள் தூக்கத்தை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் நிபுணர்களும், மெத்தை தயாரிப்பாளர்களும் நிரூபித்துள்ளனர்

மெத்தைகளில் பயன்படுத்தப்படும் ஃபோம் தரமற்றதாக இருந்தால் அவை சருமத்தை சுவாசிக்கவிடாமல் செய்து வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், இதனால் வியர்வை அதிகரிக்கூடும்.

இரவில் உறங்கும் போது உடல் முழுவதும் வியர்வை பெருக்கெடுத்தால் எப்படி நிம்மதியான தூக்கம் கிடைக்கும்?. எனவே இயற்கையான பஞ்சால் செய்யப்பட்ட மெத்தைகளை பயன்படுத்துவது வெப்பத்தை குறைத்து, வியர்வை இல்லாத ஆழ்ந்த உறக்கத்தை பெற உதவும்.

தரம் குறைந்த பொருட்களால் செய்யப்பட்ட மெத்தைகள் காலப்போக்கில் சிதைந்து, தொய்வடையும். அதில் தூங்கும் போது, முதுகுத்தண்டு தவறான சீரமைப்புக்கு உண்டாகிறது. இதனால் முதலில் லேசாக ஆரம்பித்து, நாள்கள் செல்ல செல்ல தீவிரமான முதுகுவலி, தசைப்பிடிப்பு, எலும்புகளில் தேய்மானம் போன்ற பிரச்சனைகளை உருவாகக்கூடும்.

மெத்தைகளால் சரும பிரச்சனை, தும்மல் போன்ற ஒவ்வாமை ஏற்படுவதை பலரும் அறிந்திருப்போம். வெளிப்புறம் பார்க்க சுத்தமானவை போல் காட்சியளித்தாலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மெத்தைகளுக்குள் நிறைய தூசு மற்றும் அழுக்குகள் சேகரிப்படுகின்றன.

உறங்கும் போது மெத்தைகளில் இருந்து வெளியேறும் தூசால் நுரையீரல் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதுபோன்ற ஆரோக்கிய சிக்கலைத் தீர்க்க, சான்றளிக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற ஃபோம், உள் பொருட்கள் மற்றும் துணிகளைக் கொண்ட மெத்தைகளை பயன்படுத்தலாம் .