Thursday, December 26, 2024

கண்ணில் லென்ஸ் அணிவதை நிறுத்துங்கள்,அதிர்ச்சி தகவல் !

கண்கள் தான் நாம் அனைவரும் உலகை பார்ப்பதற்கான திறவுகோலாகும்,பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள் ஆனால் நாம் இரண்டையுமே பாதுகாக்க தவறிவிடுகிறோம்.

இப்படி இருக்க நூற்றில் 90% மக்கள் கண்ணாடி உபயோகிக்கிறார்கள்  காரணம் கண்பார்வை குன்றுவது,இதில் சிறு குழந்தைகளும் விதிவிலக்கல்ல,காரணம் நமது மாறிப்போய் விட்ட வாழ்வியல் முறை மாற்றும் உணவு பழக்கவழக்கங்கள்.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் அணிவது கண்ணாடி மற்றும் லென்ஸ்களைத்தான். கண்ணாடிகளால் பக்க விளைவுகள் எதுவும் இல்லையென்றாலும் லென்ஸ்கள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

கண்களில் குறைபாடுகள் இருந்தால் சிலர் கண்ணாடி அணிவதை விரும்புவார்கள் சிலர் லென்ஸ் அணிவதை விரும்புவார்கள்,மற்றும் சிலர் இரண்டையுமே அணிவார்கள்,ஆனால் சிலர் அழகிற்காக லென்ஸ்களை கண்ணில் அணிவார்கள்,இந்த பழக்கம் இப்போது நிறைய இளைஞர்களிடையே பரவி வருகிறது. அவ்வாறு லென்ஸ் அணிபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி லென்ஸ் அணிய தொடங்கும்போது நாளடைவில் அது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்க தொடங்கும்.

நீங்கள் அழகிற்காக லென்ஸ் போடுகிறீர்கள் என்றால் ,அதனை கண்ணில் அணிவதற்கு முன்பு மருத்துவரை பரிசோதித்து அணியவேண்டும்.

எதோ ஒரு கடைக்கு சென்று விலைமலிவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கி தரமற்ற ஒன்றை கண்ணில் அணிவதால் பார்வைத்திறனில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். முழுதாக பார்வை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் லென்ஸ்களை மட்டுமே வாங்கவேண்டும்.

லென்ஸ்களால் உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். தொற்றுநோய் அபாயங்கள், ஒவ்வாமைகள், அதிக தூசி ஒத்துக்கொள்ளாதவர்கள் போன்றோர் லென்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் லென்ஸ் அணிவது அவர்களின் பார்வைத்திறனை மிகவும் பாதிக்கும் ,எனவே விழிப்புடன் செயகியல்படுங்கள்.

Latest news