Saturday, December 21, 2024

உங்கள் குழந்தைகள்  அதிக மதிப்பெண்கள்  பெறவேண்டுமா ?

படிக்கக்கூடிய  குழந்தை எங்கிருந்தாலும், படிக்கும் என்பார்கள்.  ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் நினைத்தளவு சரியாக படிக்கவோ அல்லது நல்ல மதிப்பெண்கள் பெறவோ  மிகவும் சிரமப்படுகிறார்கள் .  குழந்தைகள் முயற்சி செய்வதை கூட ஒரு   பொருட்டாக பாராமல்,  பெற்றோர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்று குழந்தைகளை திட்டுவார்கள் . பெற்றோர்களே , இனி குழந்தைகளை  திட்டுவதை தவிர்த்து விட்டு இப்படி செய்யுங்கள் . குழந்தைகள் படிக்கும் அறையில் அவர்கள் அமர்ந்து படிக்க சதுரம் அல்லது செவ்வக வடிவில் மேஜை  இருக்க வேண்டும். படிக்கும் அறையில் சத்தம் இல்லாத, அமைதியான இடமாக இருந்தால் குழந்தைகளின் கவனம் சிதறாமல் இருக்கும். அவர்கள் படிப்பை தவிர வேறு எந்த விதத்திலும் அவர்களின் கவனம் சிதறாத இடமாக இருத்தல் சிறப்பு. பண்டைய இந்திய கட்டிடக்கலை அமைப்பின் நிபுணர்களின் கூற்றுப்படி, மாணவர் அதிகபட்ச கவனத்துடன் படிப்பில் ஈடுபட அவர்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், படிக்கும் அறையின் சுவருக்கும், அவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜைக்கும் இடையே சிறு இடைவெளி விட்டு இருப்பது அவசியம்.  புத்தகங்கள் வைக்க சிறந்த இடம் வடகிழக்கு பகுதி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்றொரு அம்சம் என்னவென்றால், மாணவர்கள் படிக்கக்கூடிய மேஜை அறையில் நடுவில் வைப்பதை தவிர்க்க வேண்டும் . இனி பெற்றோர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்று குழந்தைகளை திட்டாமல்  இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்று வல்லுநர்கள் கருத்து தெருவிக்கின்றனர் .

Latest news