Friday, January 3, 2025

பதறவைக்கும் உயரத்தில் பிரமிக்க வைக்கும் கண்ணாடி பாலம்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிக உயரமான ஷெஞ்ஜியாஜியே கண்ணாடி பாலம் அமைந்துள்ளது.

ஷெஞ்ஜியாஜியே தேசிய வன பூங்காவில் உள்ள இரு மலைகளுக்கும் இடையே இணைப்பு பாலமாக விளங்கும் இப்பாலம், 360 மீட்டர் உயரமும் 430 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பாலத்தில், ஒரே நேரத்தில் எந்நூறு பேர் வரை நிற்கலாம் மற்றும் ஒரு நாளைக்கு எண்பதாயிரம் பேர் வரை பயணிக்கலாம்.

ஷெஞ்ஜியாஜியே பாலம் சிறப்பான கட்டட கலைக்காக பத்து சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

பாலம் திறக்கப்பட்ட அன்று, பாலத்தின் பலத்தை நிரூபிக்க இரண்டு டன் டிரக் ஒன்று ஒட்டப்பட்டது.

இப்பாலத்தின் மீது நடக்கும் போது, அந்தரத்தில் நடப்பது போன்று ஏற்படும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வு எண்ணற்ற சுற்றுலா பயணிகளை தொடர்ந்து கவர்ந்திழுத்து வருகிறது.

Latest news