உடலுக்கு தேவையான தூக்கம் கிடைக்காத பட்சத்தில் உயர் ரத்த கொதிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் தொடங்கி பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், உடல்நிலை மட்டுமில்லாமல், தூக்கமின்மை மன நிலை மாற்றங்களுக்கும் காரணமாக அமைவதாக கலிஃபோர்னியா (California) பல்கலைகழகம் நடத்திய ஆய்வுகள் வழியே தெரியவந்துள்ளது.
அதன்படி, தூக்கமின்மை மனிதர்களிடையே சுயநலமான எண்ணத்தை அதிகரிப்பதாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்ய நீண்ட யோசனை செய்வது மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பான சூழ்நிலையை உண்டாக்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற மன நிலை மாற்றங்கள் சற்றே தூக்கத்தின் அளவு குறையும் போதும், ஏற்பட வாய்ப்புள்ளதால் சீரான தூக்கத்தை உறுதி செய்வது அவசியமாகிறது.