Wednesday, July 2, 2025

பனிக்குகைக்குள் தோன்றிய வானவில்! வியக்க வைக்கும் இயற்கையின் அதிசய காட்சி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மவுண்ட் ரெய்னியர் (Mount Rainier) மலையில் பலரும் hiking செய்வது வழக்கம்.

அதிலும், மலைக்கு உள்ளே அமைந்துள்ள குறுகலான மற்றும் குளிர்ச்சியான சவால்கள் நிறைந்துள்ள Paradise Ice Caves, சாகச விரும்பிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், Mathew Nichols என்ற இயற்கை புகைப்பட கலைஞர், அண்மையில் பனி குகைக்குள் சென்றுள்ளார்.

அதிகாலையில் வெளிச்சம் மெதுவாக வரத் தொடங்கும் போது, குகை முழுவதும் வானவில் நிறங்களில் வண்ணமயமாக தோன்றும் அரிய காட்சியை Mathew படமெடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பனிக்கட்டிகளின் மெல்லிய வெளிப்புறத்தில் சூரிய வெளிச்சம் பிரதிபலிப்பதும், பனியோடு சேர்ந்துள்ள பாசி, தூசி போன்றவையும் இணைந்து பல வண்ணங்கள் மிளிர காரணமாக அமைவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், வெயில் அதிகமான பின் இந்த காட்சி படிப்படியாக மறைந்து விடும் என விளக்கம் அளித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news