Tuesday, May 13, 2025

மகனுக்காக இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷும், இயக்குநரும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சில மாதங்களுக்கு முன் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர்.

சட்டபூர்வமாக இன்னும் விவாகரத்து ஆகாவிட்டாலும், இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் மூத்த மகன் யாத்ரா பள்ளியில், ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இவ்விழாவில் பங்கேற்ற தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மகன்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news