டிஜிட்டல் உலகில் அறிவுத் தேடலை எளிமைப்படுத்தியுள்ள கூகுள், அவ்வப்போது பயனர்களுக்கு surprise கொடுப்பது வழக்கம்.
குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே கூகுள், Read Along என்ற Android Appஐ வடிவமைத்து இருந்த நிலையில், தற்போது இந்த செயலியின் web version வெளியாகியுள்ளது.
இந்த இணையத்தளத்தில் இருக்கும் பல கதைகளை மாணவர்கள் microphoneஇல் படிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு வார்த்தையை தவறாக படிக்கும் பட்சத்தில், அந்த வார்த்தை சிகப்பு நிறத்தில் ஹைலைட் செய்யப்படும். அதை கிளிக் செய்தால் கூகுளின் virtual அசிஸ்டன்டான Diya சரியான உச்சரிப்பை விளக்கும்.
இதனால் குழந்தைகளுக்கு சரியான உச்சரிப்பை எளிதில் பதியவைக்க முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.