நற்பலன்கள் நிறைந்த வாழைப்பழ டீ

365
Advertisement

வாழைப்பழம், டீ போன்ற உணவுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.

ஆனால், இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது வித்தியாசமான சுவையுடன் சேர்த்து, சிறப்பான பயன்களும் கிடைப்பது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முதலில், வாழைப்பழ டீ எப்படி போடுவது என்பதை பாரப்போம். தோலுடனோ தோல் இல்லாமலோ ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை வேக வைக்க வேண்டும்.

பிறகு அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்து பிளாக் டீ அல்லது பால் சேர்த்த டீயில் கலந்தால் வாழைப்பழ டீ ரெடி.

நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழம் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்த கூடியது. இதனால், அவ்வப்போது நொறுக்குத் தீனி சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால் உடல் எடை இயல்பாக குறையும்.

வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தை சீராக்கி அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.

வாழைப்பழம் மற்றும் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிசிடெண்ட்ஸ், விட்டமின் A,K, C சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கண்புரை ஏற்படும் வாய்ப்பு குறைந்து ரெட்டினா சிறப்பாக செயல்பட உதவுவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, வாழைப்பழத்தில் உள்ள டோபமைன் மற்றும் செரோட்டனின் போன்ற மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள், டீயாக குடிக்கும் போது விரைவில் உள்வாங்கப்படும் என்பதால், இனிமே சோகமா இருந்தா உடனே ஒரு கப் வாழைப்பழ டீ போட்டு குடிங்க.