Sunday, April 20, 2025

இனி Phoneஎ இல்லாம Whatsapp யூஸ் பண்ணலாம்

பல சமூகவலைத்தளங்களை நாம் பயன்படுத்தி வந்தாலும் கூட, எளிமையான பயன்பாட்டின் காரணமாக பெரும்பாலான நபர்கள் உபயோகிக்கும் Whatsapp அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது.

போனை போலவே டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்களிலும் வாட்ஸாப்பை கனெக்ட் செய்து பயன்படுத்துவது ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் பலரும் அறிந்த நடைமுறையே.

இப்படி வாட்ஸாப்ப் பயன்படுத்த மொபைல் டேட்டா ஆன்லைனில் இருப்பது அவசியம்.

ஆனால், வாட்ஸாப்ப் மல்டி டிவைஸ் அம்சத்தின் மூலம் ஒரே நேரத்தில் நான்கு டிவைஸ்களில் வாட்ஸாப்ப் கனெக்ட் செய்யலாம்.

இப்படி கனெக்ட் செய்ய முதல் முறை மட்டும் phoneஇல் QR கோடை ஸ்கேன் செய்தால் போதும். அடுத்த 14 நாட்களுக்கு அப்படியே வாட்ஸாப்ப் பயன்படுத்தலாம். 14 நாட்களுக்கு பிறகு தானாகவே log out ஆகி விடும் போது மீண்டும் ஸ்கேன் செய்து சுலபமாக உபயோகிக்கலாம்.

Latest news