வேகமாக சுழல துவங்கிய பூமி….24 மணி நேர கணக்கு குறைவதால் ஏற்படும் அபாயம்

676
Advertisement

பூமி தன்னைத் தான் சுற்றி வர சராசரியாக 24 மணி நேரம் தேவைப்படுகிறது.

இந்த கால அளவு தான் காலை, மாலை, இரவு என இயற்கையையும், துல்லியமான நேரக் கணக்குகளில் இயங்கும் அதி நவீன தொழில்நுட்ப மென்பொருட்களின் செயல்பாட்டையும் நிர்ணயிக்கிறது.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி 1.47 மில்லிசெகண்ட்ஸ் குறைவான நேரத்தில் பூமி சுற்றியதால், இதுவரை அந்த நாளே குறுகிய நாளாக கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமி 24 மணி நேரத்துக்கு 1.59 மில்லிசெகண்ட்ஸ் குறைவாகவே தனது ரொட்டேஷனை முடித்துள்ளது.

இதற்கு பருவநிலை மாற்றம், கடல் அலைகளில் நிகழும் மாற்றங்கள் மற்றும் Chandler’s Wobble என்றழைக்கப்படும் பூமியின் இயல்பான மையத்தில் இருந்து ஏற்படும் சிறு பிறழ்வு போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இது போல 24 மணி நேரத்திற்கும் குறைவான நாட்கள் தொடர்ந்து பதிவானால், பூமியின் சுற்றுவேகத்துக்கு ஈடு கொடுத்து atomic clock measurementsஇன் துல்லிய தன்மையை நிலைநிறுத்தவும் negative leap secondஐ அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எனினும், இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.